Advertisment

“ஒற்றுமையாக இருங்கள் இன்னும் ஒரு மாதத்தில் வெற்றியை நோக்கி செல்வோம்” - வைத்திலிங்கம் பேச்சு!

r-vaithilingam

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டம், சென்னை வேப்பேரியில் நேற்று (24.11.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவானது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக மாறி இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் இணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் பேசுகையில், “மூன்றரை வருடம் இந்த கட்சி ஒன்றிணைய வேண்டும் என்று அமைதியாக அமைதி புரட்சி நடத்திக் கொண்டிருந்தார்  ஓபிஎஸ். இன்னும் ஒரு மாதத்தில் கழகம் ஒன்றிணையவில்லை என்றால் ஒரு வியூகத்தை அமைத்து, ஓபிஎஸ் தலைமையிலான உரிமை மீட்பு குழு என்பது கட்சியாக மாறி மாபெரும் வெற்றியை பெறும். நமக்கு அதிமுக தொண்டர்கள் நமது உடன்பிறப்புகள். 

Advertisment

அதற்கு இடையூராக எந்த சக்தி இருக்கிறதோ அந்த தீய சக்தியை விரட்டி அடிப்பதுதான் நமது ஒரே நோக்கமாக இருக்கும் என்பதைக் கூறி ஒற்றுமையாக இருங்கள் இன்னும் ஒரு மாதத்தில் நாம் வெற்றியை நோக்கி செல்வோம்” எனப் பேசினார். மேலும் முன்னாள் முதல்வரும்,  அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம்  பேசுகையில், “டிசம்பர் 15ம் தேதி நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். எடுக்கும் முடிவு தொண்டர்கள் விரும்பும் முடிவாக இருக்கும்.

ops-pm-theni

வரும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அதிமுக இணைவது பற்றி முக்கிய முடிவை அறிவிக்க வேண்டும். டிசம்பர் 15ஆம் தேதி நாம் எடுக்கின்ற முடிவு அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும். நான் ஏற்றுக்கொண்டிருக்கின்ற ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஏற்ற வகையில் பல்வேறு பிரச்சனைகளுக்குள் நான் உள்ளே சென்று மீண்டும் அதை பூதாகரமாக வெளிப்படுத்த விரும்பவில்லை. நீங்கள் திருந்தவில்லை என்றால் டிசம்பர் 15ஆம் தேதி திருத்தப்படுவீர்கள்” எப்னப் பேசினார். 

admk Chennai O Panneerselvam R. Vaithilingam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe