மகளிர் கிராண்ட் ஸ்லாம் செஸ் தொடரில் வைசாலி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஃபிடே மகளிர் கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் தமிழ்நாட்டு வீராங்கணை வைசாலி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி யுள்ளார். 11 சுற்றுகள் கொண்ட தொடரில் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் வைசாலி தொடர்ந்து 2ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று ள்ளது கவனிக்கத்தக்கது. சுவிஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற வைசாலி அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் கேண்டிடேட் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார்.