Advertisment

டெல்லியில் ராகுல் - வைகோ சந்திப்பு; நடந்தது என்ன?

duv

Vaiko's speech at the book launch copy given to Rahul Gandhi

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாடாளுமன்றத்தில் ஆற்றிய ஆங்கில உரைகள் நூலாக்கம் பெற்று வருகிறது. அந்நூலுக்கு அணிந்துரை மற்றும் மதிப்புரை பெறுவதற்கு புதுடெல்லி வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை சந்திப்பதற்கு மதிமுக முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, அவரிடம் நேரம் பெற்றிருந்தார்.

Advertisment

அதன்படி, வைகோ இன்று ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து நூலில் நகலை அளித்து அவரோடு கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது துரை வைகோவும் உடனிருந்தார். அதனை தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான நாடாளுமன்ற உறுப்பினர் அகிலேஷ் யாதவிடம் அணிந்துரை பெறுவதற்காக அவரது மனைவியும் நாடாளுமன்ற உறுப்பினருமான டிம்பிள் யாதவை நாடாளுமன்றத்தில் துரை வைகோ சந்தித்து நூலின் நகலை வழங்கினார். 

Advertisment
Rahul gandhi durai vaiko vaiko
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe