மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ‘சமத்துவ நடைப்பயணம்’ என்ற தலைப்பில்  ஜனவரி 02 முதல் வரும் 12ஆம் தேதி வரை நடைப்பயணம் மேற்கொள்கிறார். திருச்சியில் இருந்து மதுரை வரை மேற்கொள்ளும் இந்த நடைப்பயணம், திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நேற்று காலை தொடங்கியது. 

Advertisment

இந்த நடைப்பயணத்தை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த துவக்க விழாவை காங்கிரஸ் புறக்கணித்திருந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், அமைச்சர் கே.என்.நேரு, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். 

Advertisment

இந்த நடைபயணத்தில் வைகோவினை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல தொண்டர் அணியினர் உள்ளனர். இவர்கள் கருப்பு வண்ண உடையணிந்திருக்கிறார்கள். மேலும் மாணவர் அணிக்கு வான நீல வண்ணத்தில் உடையும், இளைஞர் அணிக்கு வெள்ளை உடையும் அணிந்திருக்கிறார்கள். இவர்கள் சீராக ஒருவர் பின் ஒருவராக வைகோ முன்னே செல்ல பின்னே அணிவகுத்தபடியும் முழக்கமிட்டபடியும் இந்த நடைப்பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.