“இரட்டை இலக்கம் என்ற வார்த்தையே நான் சொல்லவில்லை” - வைகோ ஆவேசம்

vaikoi

Vaiko said he never said the word double digits

சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மதிமுகவின் நிர்வாகக் குழு கூட்டம் நேற்று (29-06-25) நடைபெற்றது. அந்த கூட்டத்தில், அண்ணா பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 15ஆம் தேதி திருச்சியில் மாநில மாநாடு நடத்த தீர்மானம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தைத் தொடர்ந்து வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், “2026 தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக மதிமுக உழைக்கும். பாஜக என்ற பெயரில் தமிழ்நாட்டில் இந்துத்துவா சக்திகள் நுழைய பார்க்கிறது. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு வாக்குரிமை கொடுக்க கூடாது என இந்துத்துவா முடிவு செய்துள்ளது” என்று கூறினார். இந்த சந்திப்பின் போது, திமுகவிடம் மதிமுக இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டுள்ளதாக செய்திகள் வருகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வைகோ, “நான் சொல்லவே இல்லையே. பொய்களைப் பரப்புவதற்காகவே ஒரு கூட்டம் இருக்கிறது. ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் இரட்டை இலக்கு என்ற வார்த்தையே என் வாயில் இருந்து வரவில்லையே.

அப்போது அப்படி இருக்க, நீங்க எப்படி கேட்குகிறீங்க? நான் பேசாத ஒன்றை பேசியதாக சொல்கிறீர்கள். எந்த அடிப்படையில் கேட்கிறீர்கள்?.அங்கீகாரம் வேண்டுமென்றால் 8 சட்டமன்ற உறுப்பினர்களாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும் ,அதை நினைத்து 12 தொகுதி கேட்கலாம் என்றும், அதை கூட தலைமை தான் முடிவு செய்யும் என்றும் முதன்மைச் செயலாளாரே சொல்லிவிட்டார். 12 இடத்தைக் கூட யாரும் யோசிக்கவும் இல்லை” என்று கூறினார். 

mdmk vaiko
இதையும் படியுங்கள்
Subscribe