கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மத்திய, விழுப்புரம் தெற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு ஆகிய மாவட்டங்களில் உள்ளவர்களிடம் நேற்று (01.02.2026)கோரிக்கைகள் குறித்த மனுக்களை பெற்றனர். இதில் திமுக துணை பொது செயலாளர் பொன்முடி, திமுக செய்தி தொடர்புக்குழு முன்னாள் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, திமுக அயலக அணி செயலாளர் எம்.எம். அப்துல்லா, திமுக செய்தி தொடர்பு குழு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக மகளிர் தொண்டர் அணி இணை செயலாளர் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ, சந்தானம் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), சுரேஷ் சம்பந்தம் ஆகியார் இடம் பெற்றிருந்தனர்.
அப்போது திமுகவினர், வணிகர் சங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், நெசவாளர்கள், மீனவ சங்கள், தொழிற்சங்கள், தொழில் முனைவோர், மாணவர் சங்கங்கள், கல்வியாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டவர்களிடம் கோரிககை மனுக்களை பெற்றது. இந்த கூட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் கடலூர் வணிகர் சங்கத் தலைவர் ஜி.ஆர். துரைராஜ் அளித்த மனுவில் கடலூர் கடற்கரையில் ஹோட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டலம் அனுமதிக்க வேண்டும். கடலூர் டிபிடிசி பேருந்து நிலையம், அரசு அச்சகம் மற்றும் அரசுப் பட்டறை ஆகியவற்றை ஓரே சாலைக்கு மாற்றி, அந்த 6 ஏக்கர் நிலத்தை மருத்துவக் கல்லூரி அல்லது தகவல் தொழில்நுட்பப் பூங்காவிற்குப் பயன்படுத்த வேண்டும்.
தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை அரசாங்கம் மீட்டு, மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். பின்தங்கிய மாணவர்களுக்கு ஆங்கில அறிவைப் பெறுவதற்காக, நகராட்சிப் பள்ளிகளில் ஆக்ஸ்போர்டு ஆங்கில மையங்களைக் கொண்டு வர வேண்டும். மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க, கடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு லட்சம் வேப்ப மரங்கள் மரங்கள் நடப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும்,சென்னைக்கு பழங்கள், காய்கறிகள், தண்ணீர் ஆகியவற்றை எடுத்துச் செல்லவும், சென்னையிலிருந்து கடலூருக்குக் கடலோரப் படகுப் போக்குவரத்திற்கு தனியார் துறைக்கு உரிமம் வழங்க வேண்டும். அனைத்து அரசுத் துறைகளிலும் சூரிய சக்தி மற்றும் மின்சாரம் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க, அனைத்து வீடுகளுக்கும் சூரிய சக்திக்கு அனுமதிகள் வழங்கப்பட வேண்டும். மேலும், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அரசாங்கம் அமைத்து, வருவாய் ஈட்டுவதற்காக தனியார் துறையிடம் வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இது போல திமுக தலைமைக்கழக சொற்பொழிவாளர் மற்றும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுரணி அமைப்பாளர் தானூர் சிவக்கொழுந்து அளித்த மனுவில் இந்தியாவில் உள்ள புனித நகரங்களுடன் மருதூரில் அவதரித்து சன்மார்க்கத்தை போதிந்து வள்ளளாரின் வடலூரையும் இந்தியாவின் புனித நகரங்களுள் ஒன்றாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். ராமபிரானின் பிறப்பிடமாக அயோத்தி நகர், பகவான கிருஷ்ணர் பிறப்பிடமான மதுரா, மாயா பிறப்பிடமான ஹரித்துவார் மற்றும் காசி, காஞ்சீபுரம், உஜ்ஜைனியின் அவந்திகா, துவாரகி எனும் துவாரகா ஆகிய 7 நகரங்கள் இந்தியாவின் புனித நகரங்களாக உள்ளது.
கொல்லாமை புலால் உண்ணாமை போன்றவற்றை வலியுருத்தி ஜீவகாருணியத்தை போதித்ததோடு உருவமற்ற வழிபாட்டை ஜோதி தரிசனத்தின் மூலம் உலகத்தில் தோற்றுவித்து மகான் வள்ளல் ராமலிங்க சுவாமிகள் வாழ்ந்தத இந்த வடலூர் நகரை இந்தியாவின் புனித நகரங்களுள் ஒன்றாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்” இவ்வாறு கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/02/cd-vdm-dmk-manifesto-team-2026-02-02-09-36-10.jpg)