அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை வழிப்பாட்டின் போது பகவத் கீதை ஸ்லோகம் உபதேசிக்க வேண்டும் என உத்தரகாண்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில அரசு கடந்த 14ஆம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை வழிப்பாட்டின் போதும் தினமும் ஒரு பகவத் கீதை ஸ்லோகம் உபதேசிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பாரம்பரிய இந்திய அறிவை நவீன கல்வியுடன் கலப்பதற்கும், மாணவர்களிடையே சுய ஒழுக்கம், தலைமை பண்பு மற்றும் உணர்ச்சியை சமநிலைபடுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மாநில இடைநிலைக் கல்வி இயக்குநர் முகுல் குமார் சதியின் அதிகாரப்பூர்வ உத்தரவில், பள்ளிகள் தினமும் ஒரு கீதை ஸ்லோகத்தை ஓதவது மட்டுமல்லாமல், அதன் அர்த்தத்தையும் அறிவியல் பொருத்தத்தையும் மாணவர்களுக்கு விளக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த உத்தரவில், ‘வாரத்தின் ஸ்லோகம்’ என்று ஒரு ஸ்லோகத்தை தேர்ந்தெடுத்து அதன் அர்த்தத்துடன் பள்ளி அறிவிப்புப் பலகையில் காட்சிப்படுத்தவும், மாணவர்கள் அதை கற்றுக்கொள்ளவும் சிந்திக்கவும் ஊக்குவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதியில் ஸ்லோகம் தொடர்பான விவாதங்களும் மாணவர்களின் கருத்துகளும் வகுப்பறையில் நடைபெற வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீதை போதனைகளை மதச்சார்பற்ற கண்ணோட்டத்தில் அணுக வேண்டும் என்றும் உளவியல், அறிவியல் மற்றும் தத்துவத்தின் லென்ஸ் மூலமாக இதை பார்க்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை மட்டுமே கற்றுக்கொடுக்கக் கூடாது. மாறாக, அவர்களின் நடத்தை மற்றும் மனப்பான்மையை பற்றியும் கற்றுக்கொடுக்க வேண்டும். வலுவான குணாதியம், சமநிலையான ஆளுமைகள் கொண்டு பொறுப்புள்ள குடிமக்களாக மாணவர்களை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/17/prayers-2025-07-17-13-03-28.jpg)