Advertisment

வெனிசுலா எண்ணெய்; இந்தியாவுக்கு ஆஃபர் கொடுக்கும் அமெரிக்கா

trumpindia

US says We will allow India to buy Venezuelan oil

சில தினங்களுக்கு முன்பு வெனிசுலாவின் தலைநகர் கராகசின் பல பகுதிகளில் அமெரிக்க ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. விமானத்தாக்குதல் மூலமாக நடந்த இந்த சம்பவத்தால், அந்த பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டது. இது நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில் அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவை அமேரிக்கா கைது செய்தது.

Advertisment

நிகோலஸ், போதைப்பொருள் கடத்தலுக்கு உடைந்தையாக இருந்தார், மேலும், சர்வதேச அமைதிக்கு குந்தகம் விளைவித்தார் அதனால் தான் கைது செய்தோம் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். மேலும் வெனிசுலாவை அமெரிக்காவே நிர்வகிக்கும் என்றும் அங்கு எண்ணெய் உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்துவோம். வெனிசுலாவின் எண்ணெய் துறையில் அமெரிக்கா வலுவான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் என்றும் தெரிசித்தார்.

Advertisment

இந்த நிலையில், வெனிசுலாவில் உள்ள கச்சா எண்ணெய்யை விற்க அமெரிக்கா  திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எண்ணெய் வளங்கள் அதிகமாக கொண்ட நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த எண்ணெய்யை அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனங்கள் சுத்திகரித்து விற்பனை செய்து வந்தது. பின்பு வெனிசுலா அரசு, எண்ணெய் வளங்களை நாட்டுடைமையாக்கியது. இதன் காரணமாக அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டன. இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க, வெனிசுலாவிற்கு பொருளாதார தடை விதித்தது. இந்த தடையை பெரிதாக பொறுப்படுத்திக்கொள்ளாத வெனிசுலா, ரஷ்ய, சீனா, கியூபா போன்ற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டது.

இவ்வாறான நிலையில், வெனிசுலா அதிபரைக் கடத்திய அமெரிக்க தற்போது, வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை வாஷிங்க்டனில் உள்ள அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் விற்பனை செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஏறக்குறைய அனைத்து நாடுகளுக்கும் வெனிசுலா எண்ணெயை விற்க அமெரிக்கா தயாராக இருக்கும் என்று  அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலாளர் கிறிஸ்டோபர் ரைட்டின் கருத்துக்களை சுட்டிக்காட்டி பேசினார். அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலாளர் கிறிஸ்டோபர் ரைட்டின், வாஷிங்டன் ஏறக்குறைய அனைத்து நாடுகளுக்கும் வெனிசுலா எண்ணெய்யை விற்கத் தயாராக இருக்கும் என்று அவர் கூறியிருந்தார். மேலும், இந்தியா தனது எரிசக்தி தேவைக்காக வெனிசுலாவின் எண்ணெய் வாங்க முன் வந்தால், அதை அனுமதிக்க அமெரிக்க தயாராக இருக்கிறதா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “நிச்சயமாக அனுமதிக்கும்” என்றார். வெனிசுலாவில், கச்சா எண்ணெய்யின் அளவு தோராயமாக 30 மில்லியன் முதல் 50 மில்லியன் பீப்பாய்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

வெனிசுலாவின் அதிபரை கடத்தி, அந்த நாட்டின் எண்ணெய் வளங்களை தங்களின் அரசே கட்டுப்படுத்தும் என்று அமெரிக்க கூறியிருப்பதை பல நாடுகள் கண்டித்து வருகின்றன. இந்த நிலையில், இந்தியா வெனிசுலாவின் எண்ணெய வாங்க அமெரிக்கா அனுமதிக்கும் என்று, அந்நாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக பல ஆண்டுகளாக இந்தியா வெனிசுலாவில் இருந்து கணிசமான அளவில் எண்ணெய் வாங்கி கொண்டிருந்தது. பின்னாளில் அந்த வர்த்தகத்தில் தொய்வு ஏற்பட்டதால், பின்னர் ரஷ்யாவுடன் எண்ணெய் வாங்க இந்தியா ஆர்வம் காட்டியது. இதன் காரணமாக அமெரிக்கா, வெனிசுலா போன்ற நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்குவதை பெருமளவு இந்தியா குறைத்து கொண்டது. பெருமளவிலான எண்ணெய்யை ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கி வருகிறது. இதனால், அதிருப்தியடைந்த அமெரிக்கா இந்திய மீதான வரியை 50% வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அமெரிக்க விற்க தயாராக இருக்கும் வெனிசுலா எண்ணெய் வளங்களை இந்தியா வாங்க அனுமதிப்போம் என்று அந்நாட்டு அதிகாரி கூறியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

America India venezuela
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe