ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது புதிய வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். வரும் 15ஆம் தேதி (15.08.2025) அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ரஷ்யா, இந்தியாவுக்கு டிரம்ப் உள்ளிட்ட நாடுகளுக்கு நெருக்கடியான சூழலை ஏற்படுத்திவரும் நிலையில் டிரம்ப் - புதின் சந்திப்பு உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகப் பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது கச்சா எண்ணெய் விவகாரம், ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் குறித்து இருவரும் விவாதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்காவின் ஜனாதிபதியான எனக்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையிலான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு, அடுத்த வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 15, 2025 அன்று அலாஸ்காவில் நடைபெறும். இது தொடர்பான மேலும் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும். இந்த விஷயத்தில் நீங்கள் கவனம் செலுத்தியதற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.