சமீபத்தில் உலக அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது எப்ஸ்டின் பைல். ஜெப்ரி எப்ஸ்டின் எனும் நபர் கரிபியன் தீவு பகுதியில் "பாவ தீவு" என்ற தனித் தீவை விலைக்கு வாங்கி அங்கே சிறுமிகளைக் கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, இது சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின் போது எப்ஸ்டின்  வீட்டில் இருந்து 35 லட்சம் பக்கங்களைக் கொண்ட ஆவணங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வீடியோ ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டது.  

Advertisment

இந்த விசாரணையில், எப்ஸ்டினுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, எப்ஸ்டின் தொடர்பான ஆவணங்களை வெளியிடுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதனை ஏற்று அமெரிக்க நீதிமன்றம் மற்றும் புலனாய்வு அமைப்புகள் இந்த ஆவணங்களை வெளியிட்டன. இதில், இ-மெயில் உட்பட பல்வேறு ஆவணங்களில் 3000க்கும் மேற்பட்ட இடங்களில் ட்ரம்ப்பின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.   

Advertisment

இது குறித்துப் பேசிய ட்ரம்ப், "இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. எப்ஸ்டினுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் எனது அரசியல் வாழ்க்கைக்கு எதிராகச் செயல்பட்டவர். எப்ஸ்டின் ஒரு மோசமான நபர் என்பதையறிந்து, 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே அவருடனான நட்பைத் துண்டித்துவிட்டேன். மேலும், அவரை எனது புளோரிடா கிளப்பில் இருந்தும் வெளியேற்றினேன்" என்று தெரிவித்திருந்தார்.   

epstein

இருப்பினும், இந்த ஆவணங்களில் ட்ரம்ப் பெயர் மட்டுமல்லாமல் பில்கேட்ஸ், பில் கிளிண்டன், ஆண்ட்ருஸ் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்களும் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், விசாரணைக்காகச் சிறையில் அடைக்கப்பட்ட எப்ஸ்டின் மர்மமான முறையில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment