ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் குறித்தான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வருகின்றன. அதன் காரணமாக இருநாடுகளுக்கிடையே தொடர்ந்து கருத்து முரண்பாடு இருந்து வந்தது. இந்த முரண்பாடு காலப்போக்கில் இரு நாடுகளுக்கிடையிலான போராக மாறும் சூழல் நிலவி வந்தது.
இதனையடுத்து, ஈரான் மற்றும் அமெரிக்க ஆகிய இருநாடுகளும் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தை கடந்த 6ஆம் தேதி ஓமன் நாட்டில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்டவில்லை. இதன் காரணமாக, சமீபத்தில் அமெரிக்காவின் போர்க்கப்பல் ஈரானுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இந்த போர் நடைபெறாமல் போனதாகத் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இரு நாடுகளுக்கு இடையே போர் நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே உள்ள பதற்றத்துக்கு மத்தியில், எஃப்-35, எஃப்-16, எஃப்-22 ரகத்தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட அதிநவீன போர் விமானங்களை மத்திய கிழக்கில் அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி 13 போர்க் கப்பல்கள், அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்டவையும் மத்திய கிழக்கில் நிலைநிறுத்தியுள்ளது. எப்போது வேண்டுமானாலும் போர் தொடங்கலாம் என்பதால் உலக அளவில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/20/iranamerica-2026-02-20-21-53-46.jpg)