சட்டவிரோதத் துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் என்ற இடத்தில் இயங்கி வந்த சட்டவிரோதத் துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருந்த துப்பாக்கி தயாரிப்பு மற்றும் துப்பாக்கி பழுது பார்ப்பு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் சட்ட விரோதமாகத் துப்பாக்கிகளைத் தயாரித்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு 5 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.