'Until further notice...' - Warning to Thiruvallur and Pudukkottai fishermen Photograph: (fisherman)
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (25-10-2025) கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறினால் அதற்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோன்ந்தா (Montha) என்று பெயரிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடல் சீற்றம் அதிகரிக்கும் என கருதப்படும் நிலையில் புதுக்கோட்டையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட எச்சரிக்கையில் மறு அறிவிப்பு வரும் வரை புதுக்கோட்டை மீனவர்கள் நாட்டுப்படகு, விசைப்படகுகளில் கடலுக்கு செல்ல வேண்டாம். மீன்பிடி வலை உள்ளிட்ட உபகரணங்களை கரையில் ஏற்றி பாதுகாப்பாக வைக்கும்படி அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற அறிவுறுத்தல் திருவள்ளூர் மாவட்ட மீனவர்களுக்கும் மீன்வளத்துறை சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
Follow Us