Advertisment

வரலாறு காணாத விலையேற்றம் ; 1 லட்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை!

WhatsApp Image 2025-12-15 at 4.48.26 PM

வழக்கமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கத்தின் விலை, கடந்த சில மாதங்களாக , சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் நகை பிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சி தரும் வகையில், இன்று (15-12-25) தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டிருப்பது என்பது வரலாற்றில் இது வரை இல்லாத அளவிலான விலையேற்றம் என்று கூறப்படுகிறது. 

Advertisment

கடந்த அக்டோபர்  மதம் 17 ம் தேதி தங்கம் சவரனுக்கு ரூ. 97,600 க்கு விற்கப்பட்டதே மிகப் பெரிய உச்சம் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் நவம்பர் 5 அன்று தங்கத்தின் விலை ரூ. 89,440 என்ற அளவில் வீழ்சியடைந்தது. இருப்பினும்  இந்த மாதம் ( டிசம்பர் ) தொடக்கம் முதலே தொடர்ந்து தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரத்தொடங்கியது. இந்த நிலையில், இன்று வரலாற்றில் முதன் முறையாக தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ . 1 லட்சத்தை தாண்டியுள்ளது. அதாவது ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.12,515 ஐ தொட்ட நிலையில், ஒரு சவரன் தங்கம் ரூ. 1,00,120 எட்டியிருப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. 

Advertisment

தங்கத்தின் விலையைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி 213 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது திருமண சீசன் என்பதால், இந்த விலை உயர்வு நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

gold price increased
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe