சென்னை, மீனாட்சி மற்றும் ஸ்ரீமுத்துக்குமரன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மறைந்தA.N ராதாகிருஷ்ணன் - கோமதி ராதாகிருஷ்ணன் அவர்களின் பேரனும், ஜெயந்தி ராதாகிருஷ்ணன்-பிரபாகர் எட்வேர்ட், மெஹர் பல்கலைக்கழக (MAHER UNIVERSITY) வேந்தர் மகன் ஆகாஷ் பிரபாகர், (Pro-Chancellor) சார்பு வேந்தர் அவர்களுக்கும், சென்னை, E.V.P குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் E.V.பெருமாள்சாமி ரெட்டி - E.V.P ராஜேஸ்வரி அவர்களின் பேத்தியும், திரு. C.M.கிஷோர் ரெட்டி திருமதி. லீலா கிஷோர் ரெட்டி இவர்களது மகள் செல்வி. அஷ்மிதா ரெட்டிக்கும் 30.06.2025 மாலை 7.00 மணியளவில் திருவேற்காடு (GPN PALACE) ஜி.பி.என் பேலசில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழக ஆளுநர். மேதகு R.N.ரவி அவர்கள் வருகை தந்து மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்துரை நல்கி சிறப்பித்தார்.தமிழ்நாடு அமைச்சர் பெருமக்கள், பல்வேறு கல்வி அறக்கட்டளை அறங்காவலர்கள் மற்றும் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களின் நிறுவனர்கள், பல்கலைக்கழக பேராசிரிய பெருமக்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைத்துறையைச் சார்ந்தவர்கள், தொழிலதிபர்கள், தொழிற்கல்வி, மருத்துவக் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும்ஊழியர்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்தினர்.