Advertisment

“ஒன்றிய அரசே... மீனவர் நலனில் அக்கறை காட்டு...” - படகில் வந்து ஆர்ப்பாட்டம் செய்த வேல்முருகன்!

pdu-boat-velmurugan

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதும், மீனவர்களின் படகு, வலை, மீன்களைப் பறித்துக் கொண்டு சிறைபிடிக்கப்படுவதும் துயரமான தொடர்கதையாக உள்ளதால் மீனவர்கள் அச்சத்துடனேயே கடலுக்குள் சென்று வருகின்றனர். எனவே ஒன்றிய அரசே இந்த அவலங்களுக்குத் தீர்வு காண வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைகளோடு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர் வாழ்வுரிமை மீட்பு பயணம் அறிவிக்கப்பட்டிருந்தது. கடலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திட்டமிட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில் வேல்முருகன் வரவில்லை என அனைவரும் காத்திருந்த நிலையில் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 3 நாட்டுப் படகுகளில் வேல்முருகன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகி நியாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கடல் வழியாக ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டத்தில் வேல்முருகன் வேல்முருகன் பேசும் போது, “மோடி வந்தால் மீனவர்களுக்குப் பாதுகாப்பு என்றார்கள். ஆனால் அதன் பிறகு தான் சிங்கள பௌத்த இனவாத அரசு நமது மீனவர்கள் படகுகளைப் பிடித்து வைத்துள்ளனர். இந்தி பேசும் இந்தியக் கடற்படையினரும் தமிழ் பேசும் மீனவர்களைத் தாக்கி வருகின்றனர். மீனவர்கள் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. மாநில அரசின் மானியம், மீன் பிடித் தடைக் கால நிவாரணம் மட்டும் கிடைக்கிறது. ஒரு மீனவர் இறப்புக்கு இறப்புச் சான்று பெறவே 8 ஆண்டுகள் ஆகியுள்ளது. இனி நிவாரணம் எப்போது கிடைக்குமோ?.

புயல் காலங்களில் மீனவர்களைக் காப்பாற்ற மாநில அரசு கேட்ட போது இரவில் விமானங்களுக்குக் கண் தெரியாது என்றது ஒன்றிய அரசு. நிச்சயமற்ற வாழ்க்கை. இந்தியக் கடலில் மீனவர்கள் உயிர் உரிமைகளை மீட்டுத் தாருங்கள். சிறையில் அடைபட்டுள்ள மீனவர்களை மீட்க முடியவில்லை. தமிழக அரசு ஒன்றிய அரசுக்கும் ஒன்றிய அரசு இலங்கைக்குக் கடிதம் எழுதுகிறார்கள். டீசல் மானியம் போதவில்லை. கோட்டைப்பட்டினம் துறைமுகம் கேட்டால் ஒன்றிய அரசு தரவில்லை. மாநில அரசு செய்திருக்கிறது. போராட்டத்திற்குப் படகுகள் கொடுக்கக் கூடாதென்று தமிழக போலிசார் தடுக்கிறார்கள். ஆனால் சொந்தப் படகில் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து வந்தோம். நாங்கள் கச்சத்தீவு போனால் என்ன செய்வீர்கள்?.

pdu-boat-velmurugan1

Advertisment

சிங்கள பேரினவாத அரசு கச்சத்தீவு எங்களுடையது என்று கொக்கரிக்கிறது ஆனால் இந்தியப் பேரரசு வாய்மூடி இருப்பது அவமானம் இல்லையா. விடுதலைப்புலிகள் பாதுகாப்பில் கடல் இருந்த போது மீனவர்கள் பாதுகாக்கப்பட்டனர். ஆனால் அதன் பிறகு சுட்டுக் கொல்கிறான். கச்சத்தீவு மீட்பது தமிழக அரசின் கொள்கை. முதலமைச்சர் சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பி இருக்கிறார் ஆனால் ஒன்றிய அரசு மௌனமாக உள்ளது என்றார். ஆர்ப்பாட்டத்தில் இலக்கியா பேசும் போது, “சிங்கள பௌத்த இனவாத அரசு நம் மீனவர்களைப் பிடித்து திருக்கை மீனுடன் வன்புணர்வு செய்யச் சொல்கிறார்கள். தந்தை மகனைத் தகாத உறவு கொள்ளச் சொல்கிறார்கள். 900 கடலாடிகளைச் சுட்டுக் கொன்ற பாவிகள் அவர்கள். அதனைக் கேட்க இந்திய அரசால் முடியவில்லை. ஆனால் இந்திய மீனவன் எதிரி நாடான பாகிஸ்தானுக்கு வழி தவறிப் போனால் பத்திரமாக அனுப்பி வைக்கிறான். நம் மீனவர்கள் தினம் தினம் செத்துச் செத்துப் பிழைக்கிறார்கள்” என்று பேசினார்.

Tamil fishermen union govt Boat Sri Lanka tamilaga valvurimai katchi president velmurugan velmurugan fisherman pudukkottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe