கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை இணை அமைச்சர்சதீஷ் சந்திர துபே டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயணமாக வருகை புரிந்தார். அமைச்சரை, என்எல்சி ஐஎல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி, இயக்குனர்கள் மற்றும் நிறுவனத்தின் கண்காணிப்பு துறை தலைமை அதிகாரி ஆகியோர் வரவேற்றனர். மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின்  அணிவகுப்பு மரியாதையை அமைச்சர் ஏற்றுக்கொண்டார். 

Advertisment

பின்னர் அவர்  என்எல்சிஐஎல்-இன் செயல்பாட்டுத் திறன் மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்த விரிவான ஆய்வுக் கூட்டத்திற்கு அமைச்சர் தலைமை தாங்கினார். தொடர்ந்து, நிறுவனத்தின் இளம் பொறியாளர்களுடன் கலந்துரையாடிய அவர், நாட்டின் எரிசக்திபாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு என்எல்சிஐஎல் ஆற்றி வரும் முக்கியப்பங்கினைப் பாராட்டினார். சென்னைக்கு குடிநீர் வழங்குதல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மாநில அரசுகளுக்கு உதவுதல், மூலம் நீர் சேமிப்பு, தூய்மைப் பணிகள், சுரங்கக் கழிவுகளிலிருந்து முக்கிய தாதுக்களைப் பிரித்தெடுத்தல் மற்றும் ஆக்கப்பூர்வமான சமூகப் பொறுப்புணர்வுதிட்டங்கள் போன்ற நிறுவனத்தின் முயற்சிகளை அவர் வெகுவாகப் பாராட்டினார்.

Advertisment

 நெய்வேலி நீர் ஆலைக்கு  சதீஷ் சந்திர துபே அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தில் சுரங்க நீரை முறையாகப் பயன்படுத்தி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை நெய்வேலி நீர் என்ற பெயரில் வணிக ரீதியாகத் தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் உள்ளூர் சமூகத்தினருக்கு, குறிப்பாக மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. லாப நோக்கமின்றி, மிகக் குறைந்த விலையில் அண்டை கிராமங்களுக்குத் தூய்மையான குடிநீர் வழங்க இத்திட்டம் முன்னுரிமை அளிக்கிறது. இந்த ஆலையானது ஒரு மணி நேரத்திற்கு 10,000 லிட்டர் சுத்திகரிக்கும் திறன் மற்றும் ஒரு நாளைக்கு 1,00,000 லிட்டர் உற்பத்தியை இலக்காகக் கொண்டுள்ளது.

nlc-model
கோப்புப்படம்

அமைச்சர், சுரங்கம் 2ல் உள்ள கோசாலைக்குச் சென்றார். புதுப்பிக்கப்பட்ட தொழிலாளர் உணவகத்தைத் திறந்து வைத்தார் மற்றும் நில மீட்பு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பசுமை பூங்காவை பார்வையிட்டார். நெய்வேலி புதிய அனல் மின் நிலையத்தில்  இருந்தபடி, தூத்துக்குடியில் உள்ள என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் வளாகத்தில் அமைக்கப்பட்ட மின்சார வாகன சார்ஜிங் மையத்தை அமைச்சர் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். மேலும், என்எல்சிஐஎல் நிறுவனத்தின் 70 ஆண்டு கால வரலாற்றைப் பறைசாற்றும் பாரம்பரிய அருங்காட்சியகம் மற்றும் முதியோர் இல்லமான ஆனந்த இல்லம் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார். இதில்  என்எல்சிஐஎல் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் பிரசன்னா குமார் மோட்டுபள்ளி கூறுகையில், “ 70 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் வளர்ச்சியில் என்எல்சிஐஎல் முக்கியப் பங்காற்றி வருகிறது. 

Advertisment

தற்போது எங்களது மின் உற்பத்தித் திறனை மூன்றுமடங்காகவும், சுரங்கத் திறனை இரண்டு மடங்காகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்திறனை ஏழு மடங்காகவும் அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்காக ரூ.1,25,000 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளோம். மத்திய அமைச்சர்கள் ஜி.கிஷன் ரெட்டி மற்றும் சதீஷ் சந்திர துபே ஆகியோரின் உறுதியான ஆதரவு எங்களது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என்றார். என்எல்சிஐஎல் நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.