Advertisment

“தி.மு.க., காங்கிரஸ் போல எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை” - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி!

piyush-goyal-pm-l-murugan-naianar

மதுரை மண்டேலா நகர் பகுதியில் பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்தல் பொதுக்கூட்டம் நேற்று (01.03.2026) நடைபெற்றது.  இந்த பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டத் தலைவர்கள் பங்கேற்றனர். 

Advertisment

இந்த கூட்டத்திற்குப் பிறகு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் மேலிடப் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பொதுக் கூட்டத்திற்கு மக்களை வர அனுமதிக்காமல் இருக்க திமுக முயற்சித்த போதிலும் அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று அர்த்தமல்ல. இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்தீர்கள். இதைவிட ஒரு பெரிய கூட்டத்தை மதுரையில் பார்த்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இது எடப்பாடி பழனிசாமி மீதும், பிரதமர் மோடி மீதும் உள்ள அன்பையும் பாசத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. 

Advertisment

திமுகவின் ஊழல் குறித்து மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது திமுக ஆட்சியில் அதிகரித்து வரும் போதைப்பொருட்கள் புழக்கத்தை மக்கள் விரும்பவில்லை. தமிழ்க் கலாச்சாரம், தமிழ் மக்கள், தமிழ் மொழிக்கு முற்றிலும் எதிரான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மனப்பான்மையும் நடத்தையும் மக்களுக்குப் பிடிக்கவில்லை. தொகுதிப் பங்கீடு குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் இன்று நடைபெறவில்லை. இன்றைய கூட்டத்தின் வெற்றியைப் பற்றித்தான் நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்தோம். 

nda-alliance-1

எங்கள் கூட்டணிக் கட்சிகளும், ‘தொடர்ச்சியாக 2வது முறையாக இவ்வளவு பெரிய கூட்டத்தை நடத்தியதன் மூலம் திமுக முற்றிலும் மனச் சோர்வடைந்துள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது’ என்று தெரிவித்தனர். பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஒரு கூட்டத்தை நடத்துவது குறித்தும் விவாதித்துள்ளோம். அவரை மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருமாறு அழைக்கிறோம். இது குறித்து விரைவில் தகவல் தெரிவிப்போம். அப்போது மோடி உரையாற்றுவார். அது திமுகவின் தலைவிதியை முடிவு செய்யும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு குடும்பம். திமுக, காங்கிரஸ் போல எங்களுக்குள் எந்த உள் பிரச்சனையும் இல்லை.  நாங்கள் ஒரு குடும்பம் போல வேலை செய்கிறோம். இது குடும்பம் போல முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். 

Alliance congress dmk admk Assembly Election 2026 edappadi k palaniswami madurai Piyush Goyal NDA
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe