Advertisment

“ராகுல் காந்தி நாட்டின் முன்னேற்றத்தை வெறுக்கிறார்” - வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர்!

piyushg

Union Minister Piyush Goyal on US trade deal

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்ததால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு  50% உயர்த்தி பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்.  இந்த வரி விதிப்பு நடவடிக்கையால், நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்தது. இது குறித்து, அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் அரசு வரியை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென  எதிர்க்கட்சிகளும் கருத்து தெரிவித்து வந்தன. இதனிடையே, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா கைவிட வேண்டும், இல்லையெனில், இந்தியா மீதான வரியை 500% உயர்த்திக்குவோம் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.

Advertisment

இந்த நிலையில், பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தொலைபேசியில் உரையாடினார். அதில் வர்த்தகம் சம்பந்தமாக பல விஷயங்கள் பேசப்பட்டதாகக் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து, அமெரிக்கா விதித்த சில வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதால் இந்தியா மீதான வரியை குறைப்பதாக டிரம்ப் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்து, வெனிசுலாவிடம் எண்ணெய் வாங்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அமெரிக்க பொருட்களை $500 பில்லியன் டாலருக்கும் கூடுதலாக வாங்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இதனால் இந்திய பொருட்களின் மீதான இறக்குமதி வரியை 25% லிருந்து 18% ஆக குறைக்க அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisment

பிரதமர் மோடி எடுத்த இந்த முடிவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மீது கடுமையான அழுத்தம் உள்ளதால் அவர் நமது நாட்டை அமெரிக்காவுக்கு விற்றுவிட்டதாகவும், இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் பொதுமக்களின் கடின உழைப்பை விற்றுள்ளார் எனவும் கடுமையாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்துள்ளார். இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இன்று நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்தியரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள். அவர் அமெரிக்காவுடன் மிகச் சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார். இதற்காக நாட்டு மக்கள் பல மாதங்களாக காத்திருந்தனர். தேசிய நலனையும் பொது நலனையும் முன்னணியில் வைத்து, வலுவான இந்தியாவின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வர்த்தக ஒப்பந்தம் நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேச விரும்புவோம், ஆனால் அந்த அவமானகரமான காட்சியை நாம் அனைவரும் கண்டோம். எதிர்க்கட்சிகள், குறிப்பாக ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி மற்றும் அவர்களது கூட்டணிக் கட்சிகளான திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி, இன்று நாடாளுமன்றத்தில் மிகவும் அவமானகரமாக நடந்து கொண்ட விதம். அவர்கள் சபாநாயகரின் இருக்கையை கூட அடைந்து அவரை அவமதித்தனர். எதிர்க்கட்சியையும் ராகுல் காந்தியையும் நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

ராகுல் காந்தி போன்ற எதிர்மறை எண்ணம் கொண்ட தலைவர்கள் இன்று நாட்டை தவறாக வழிநடத்தவோ அல்லது குழப்பவோ முயற்சிப்பது ஒரு பெரிய துரதிர்ஷ்டம். ராகுல் காந்தியின் பொய்களையும் ஏமாற்று வேலைகளையும் நான் கண்டிக்கிறேன். அவர் மக்களை தவறாக வழிநடத்த விரும்புகிறார், ஆனால் அது வேலை செய்யாது. நாடு முன்னேறி வருகிறது. இந்தியாவை உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக மாற்றுவதில் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் காங்கிரஸ் ஆட்சியின் பத்து ஆண்டுகளில், அவர்கள் பொருளாதாரத்தை நாசமாக்கினர், மக்களை தொந்தரவு செய்தனர், வளர்ச்சியை நிறுத்தினர். ராகுல் காந்தி எதிர்மறையின் சின்னம். அவருடன் பழகுவதன் மூலம், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் அவர்கள் அனைவரும் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள். இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் உயர்தரமான, உயர் செயல்திறன் கொண்ட தரவு மையங்கள் இந்தியாவிற்கு வரலாம், லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை ஈர்க்கலாம். இதில் ராகுல் காந்திக்கு என்ன பிரச்சனை? ராகுல் காந்தி நாட்டின் முன்னேற்றத்தை வெறுக்கிறார். இரு நாடுகளின் பேச்சுவார்த்தை குழுக்களுக்கு இடையேயான இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஒப்பந்தம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும்” என்று கூறினார். 

Rahul gandhi tariff trade Piyush Goyal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe