தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட தமிழகம் தலை நிமிர தமிழனின் பயண யாத்திரைத்திரையின் நிறைவு விழா புதுக்கோட்டையில் இன்று (04.01.2025) நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமித்ஷா பங்கேற்றார். இந்த விழாவில் கலந்து கொண்டமத்திய தகவல், ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை அமைச்சர் எல். முருகன் பேசுகையில், “தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்ற, ஏற்படுத்தி இருக்கின்ற இந்த யாத்திரை தமிழ்நாட்டில் திமுகவுக்கு வழியனுப்புகின்ற யாத்திரை ஆகும். 

Advertisment

இந்த யாத்திரை ஜெயின் ஜார்ஜ் கோட்டைக்கு செல்லுகின்ற யாத்திரை ஆகும். வெற்றிவேல் யாத்திரையை நடத்தினோம். 4 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு சென்றார்கள். என் மன் என் மக்கள் யாத்திரையை நடத்தினோம் 18% வாக்குகளை பெற்றோம். அதேபோல தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியை உறுதி செய்கின்ற யாத்திரை ஆகும். வருகின்ற நாட்கள் நமக்கெல்லாம் மிக முக்கிய நாட்கள். 

Advertisment

திமுகவை வீட்டுக்கு அனுப்புகின்ற நாட்கள். திமுகவினுடைய ஊழலையும், திமுகவினுடைய குடும்ப ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்பியே ஆக வேண்டும். திருப்பரங்குன்றத்தில் நடந்ததை பார்த்தோம். திருப்பரங்குன்றத்தில் எப்படி மிகப்பெரிய ஒரு எழுச்சியோடு வந்தோமோ, கந்தசஷ்டி கவசம் அவமதிக்கப்பட்ட போது எப்படி தமிழகம் வெகுண்டு எழுந்ததோ அதேபோல இன்றைக்கு தமிழகம் திருப்பரங்குன்றத்தில் வெகுண்டு எழுந்தோம். இப்போது அதே வெகுண்டு எழுந்ததோடு திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” எனப் பேசினார்.