தமிழக அரசியலில் புதிதாக உருவாகியுள்ள கட்சியான தவெக, ஆரம்பம் தொட்டே அரசியல் களத்தில் பேசுபொருளாக இருந்து வருகிறது. அந்த வகையில், ஒரு முறை கூட தேர்தலைச் சந்திக்காத இந்த கட்சியினை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் உட்படப் பல கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. அதே வேளையில், விஜய்யின் த.வெ.க. வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் விஜய்யின் த.வெ.க. வருகின்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். அதாவது, "வருகின்ற தேர்தலில் விஜய்யின் தவெக நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், விஜய் யாருடைய வாக்குகளைக் கைப்பற்றப் போகிறார்? என்பது கேள்விக்குறி. தமிழ்நாட்டு அரசியலில் பெண்களின் குரல் சக்திவாய்ந்ததாக உள்ளது. விஜய், திமுகவின் வாக்குகளையும், பெண்களின் வாக்குகளையும் கைப்பற்றப் போகிறாரா? என்பதைப் பொறுத்திருந்து தான் தான் பார்க்கவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மாநிலக் கட்சிகள் முதல் தேசிய கட்சிகள் வரை ஆருடம் சொல்லும் அளவிற்கு, தமிழக அரசியல் களத்தில் த.வெ.க. முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், தமிழக அரசியலில் தேர்தல்களின் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதில் பெண்களின் வாக்குகள் இன்றியமையாதது. இந்த நிலையில், அதிகப்படியான பெண்கள் விஜய்க்கு ஆதரவாக இருப்பதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். எனவே, "விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார்" என்று பலரும் கருத்துக்களை முன் வைக்க, இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/09/nirmala-tvk-vijay-2026-02-09-11-01-08.jpg)