கார்த்திகை திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்தாண்டு டிசம்பர் 1ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் போது தேவஸ்தானம் தரப்பு, இந்து சமய அறநிலையத்துறை தரப்பு, சிக்கந்தர் தர்கா தரப்பு மேலும் சில தனி நபர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (06-01-26) தீர்ப்பு வழங்கியது.
அதில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் என்றும், மலை உச்சியில் உள்ள தூணில் கோயில் நிர்வாகமே விளக்கு ஏற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர். மேலும், மலை முழுவதும் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அந்த துறையின் அறிவுறுத்தலோடு தீபத்தூணில் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் ஒவ்வொரு கார்த்திகை தினத்தின் போது தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு உள்ளிட்ட மற்ற மேல்முறையீட்டு மனுக்களை முடித்து வைத்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் டெல்லியில் இன்று (06-01-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள மிகவும் பழமையான மற்றும் முருகன் வசிக்கும் கோயிலின் பக்தர்களுக்கு இன்று தமிழ்நாடு உயர்நீதிமன்றம் கிளை நீதி வழங்கியுள்ளது உண்மையிலேயே மிகுந்த திருப்தி அளிக்கிறது. பல நூற்றாண்டுகளாக, கார்த்திகேய பகவானுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அங்கு விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மற்றும் திமுகவின் பிற மூத்த தலைவர்கள் சனாதன தர்மத்தை தொடர்ந்து திட்டி, கேலி செய்து, தாக்கி வருவது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல.
சனாதனத்திற்கு எதிராக செயல்படும் நிலையில் நீதிமன்ற தீர்ப்பு நீதியை நிலைநாட்டியுள்ளது. நீதிபதி சுவாமிநாதன் நீதியை நிலைநாட்டும் வகையில் தீர்ப்பை வழங்கினார். திமுகவின் மனநிலையை புரிந்துகொள்ள நீதிபதிக்கு எதிராக கொண்டு வந்த தகுதி நீக்கத் தீர்மானமே உதாரணம். தகுதி நீக்கத் தீர்மானத்தின் மூலமாக நீதித்துறை அவர்கள் அச்சுறுத்தினர்” என்று கூறினார். திமுகவின் மனநிலையை புரிந்துகொள்ள நீதிபதிக்கு எதிராக கொண்டு வந்த தகுதி நீக்கத் தீர்மானமே உதாரணம். தகுதி நீக்கத் தீர்மானத்தின் மூலமாக நீதித்துறை அவர்கள் அச்சுறுத்தினர்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/06/piyushgoyal-2026-01-06-15-02-18.jpg)