தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. அதே சமயம், சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையமும் எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட பணிகள் மூலம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
இத்தகைய சூழலில் தான் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் (10.12.2025) நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று (11.12.2025) சந்தித்து பேசியிருந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நடத்தி இருக்கிறார். அதற்காக சந்தித்து அவரை வாழ்த்திவிட்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக வந்தேன்” என்றார். மற்றொருபுறம் நாளை மறுநாள் (14.12.2025) நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமித்ஷாவை சந்தித்து பேச் உள்ளார்.
அப்போது அவர் கூட்டணி தொடர்பாக பேச உள்ளதாகவும்,அமித்ஷாவின் தமிழகம் வருகை தொடர்பாகவும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் 15ஆம் தேதி தமிழகம் வர உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை வரும் அமைச்சர் அமித்ஷா கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு கட்சிகளை கூட்டணியில் இணைக்க அமித்ஷா முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு சென்னையில் இருந்து வேலூர் செல்லும் அமைச்சர் அமித்ஷா அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/12/amitsh-vanakkam-tn-2025-12-12-10-28-54.jpg)