தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் 2026ஆம் ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. விரைவில் இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்காலில் நாளை (14.02.2026) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். 

Advertisment

இதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று (13.02.2026) டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைகிறார். அதனைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இரவு ஓய்வெடுக்கிறார். அதன்பின்பு திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம்  நாளை காரைக்கால் புறப்பட்டுச் செல்கிறார். அதன்படி காரைக்கால்  நகராட்சி சந்தை திடலில் காலை 11 மணியளவில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா உரையாற்ற உள்ளார். 

Advertisment

அதன் பின்பு மீண்டும் ஹெலிகாப்டரில் திருச்சிக்குச் சென்றடைந்து அங்கிருந்து விமானத்தில் சேலம் புறப்பட்டுச் செல்கிறார் இதற்கிடையே திருச்சியில் தங்கியுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.