Advertisment

“தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது” - மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு!

amit-sha-hand

தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட தமிழகம் தலை நிமிர தமிழனின் பயண யாத்திரையின் நிறைவு விழா புதுக்கோட்டையில் இன்று (04.01.2026) நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமித்ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “வரும் தேர்தலில், காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு வலுவான போட்டியைக் கொடுக்க பாஜக, அதிமுக மற்றும் சக கூட்டணி கட்சிகளுடன் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கப் போகிறோம். திமுக அரசு எல்லாத் துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது. 

Advertisment

இந்தியா முழுவதிலும் எங்கும் ஊழல் மிகவும் நிறைந்த அரசாங்கம் ஒன்று உண்டு என்றால் துரதிர்ஷ்டவசமாக அது தமிழ்நாட்டில்தான் உள்ளது. 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றியின் ஆண்டுகளாகும். 2026ஆம் ஆண்டில், தமிழ்நாடு மற்றும் வங்காளத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மிகப்பெரிய பெரும்பான்மையுடன் அமைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் (மகள்களின்) பாதுகாப்பிற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தமிழக அரசுக்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே உள்ளது. அது முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினை மாநில முதல்வராக்குவதுதான். தமிழ்நாட்டில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது என்பதை தமிழக மக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். 

Advertisment

ஏப்ரல் 2026இல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் என்பதை என்னால் தெளிவாக பார்க்க முடிகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ் மொழிக்கு எதிரானது என்ற பிரச்சாரத்தை முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக கட்சி தொடங்கியுள்ளது. இன்று, தமிழ் மொழியில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். தேர்வுகளை எழுதலாம் என தேர்வர்களை அனுமதிக்கும் செயல்முறையைத் தொடங்கியவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என்பதை நான் தமிழக மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். 

amit-shah-mic-1

தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டை குப்பைக் கிடங்காக மாற்றியுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து வரும் ஆபத்தான உயிரி மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் புனித நதிகளில் கொட்டப்படுகின்றன. தமிழ்நாட்டில், அவர்கள் இந்துக்களுக்கும் அவர்களின் நம்பிக்கைக்கும் எதிராக தொடர்ச்சியான அவமானங்களை கட்டவிழ்த்துவிட்டனர்.  தமிழ்நாட்டில், அயோத்தி ராமர் கோயிலின் பூமி பூஜையின் போது அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திமுகவின் மூத்த தலைவர் சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலேரியாவுடன் ஒப்பிட்டார். 

இந்து ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இந்து சிலைகளை கரைப்பதற்கு கூட திமுக அரசு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இந்து சமூகத்திற்கு எதிராக அட்டூழியங்களைச் செய்வதன் மூலம் நமது அரசியலமைப்பின் புனிதத்தை நீங்கள் (திமுக) மீறிவிட்டீர்கள் என்பதை நான் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குச் சொல்ல விரும்புகிறேன்” எனப் பேசினார்

dmk Amit shah b.j.p nainar nagendran pudukkottai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe