தமிழக பா.ஜ.க சார்பில் திருநெல்வேலியில் உள்ள தச்சநல்லூரில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் இன்று (22.08.2025) நடைபெற்றது. இந்த பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு உரையாற்றுகையில், “தமிழ்நாட்டின் மண்ணில் தமிழ் மொழியில் பேசத் தெரியாது என்பதால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தமிழகத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நியமித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
துணை ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்ட பிறகு, தமிழ்நாட்டின் மகன் சி.பி. ராதாகிருஷ்ணன் மாநிலங்களவைத் தலைவராகப் போகிறார் என்பதை மாநில மக்களுக்குச் சொல்ல வந்தேன். முன்னதாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஏ.பி.ஜே. அப்துல் கலாமை இந்தியக் குடியரசுத் தலைவராக்குவதன் மூலம் அவருக்கு இந்த கௌரவத்தை வழங்கியது. பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக பாடுபட்டுள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காமில் நமது அப்பாவி குடிமக்களைக் கொன்றனர்.
பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் எஜமானர்களுக்கும் பாடம் கற்பிப்போம் என்று பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார். மேலும் ஆபரேஷன் சிந்தூருக்கு அனுமதி அளித்ததன் மூலம், அவர்களின் பயங்கரவாத தளங்களை அழித்தோம். தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணி ஆட்சி அமைக்கும். மணல் அள்ளுதல், ஊட்டச்சத்துப் பெட்டி வழங்குதல், வேலைக்கான பண ஒதுக்கீடு, நூறு நாள் வேலைவாய்புட் திட்டம் (MNREGA) மற்றும் பல உள்ளிட்ட 'மோசடிகளில்' சிக்கியுள்ள, நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசு திமுக” எனப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/22/amit-shah-tn-mic-1-2025-08-22-17-53-37.jpg)