Union Home Minister Amit Shah wishes Kanimozhi a happy birthday
திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி இன்று (05-01-25) தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த தினத்தையொட்டி இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் ஆகியோரின் நினைவிடத்தில் கனிமொழி மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது திமுக தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு கூடி கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா, தொலைப்பேசி வாயிலாக கனிமொழியை தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
முன்னதாக நேற்று மாலை புதுக்கோட்டையில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us