தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த பரபரப்பான சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று (04-01-26) தமிழகம் வருகிறார். அந்தமானியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று திருச்சி விமான நிலையத்துக்கு வரும் அமித்ஷா, அதன் பின்னர் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு செல்கிறார். அதன் பின்னர்,பள்ளத்திவயல் பகுதியில் நடைபெறவுள்ள தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரச்சார நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

Advertisment

அதனை தொடர்ந்து திருச்சிக்கு செல்லும் அமித்ஷா, தனியார் நட்சத்திர விடுதியில் பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அதனை முடித்துவுட்டு நாளை ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார். அதனை தொடர்ந்து மன்னார்புரத்தில் நடைபெறும் ‘மோடி பொங்கல் விழா’ விழாவில் பங்கேற்கிறார்.