திருநெல்வேலியில் தமிழக பா.ஜ.க சார்பில் இன்று (22-08-25) பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி மாநாடு, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நெல்லைக்கு வருகை தரவுள்ளார். கொச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றப் பிறகு அங்கிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று பிற்பகல் அமித் ஷா வருகிறார். நெல்லை தச்சநல்லூரில் பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்கும் அமித் ஷா, நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளா எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாநாட்டில், தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.