தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளமாகவும் இந்தியாவின் முக்கியப் பகுதியாகவும் உள்ள செங்கோட்டையில் பல்வேறு கட்ட பாதுகாப்புகளை மீறி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ தீவிரமாக விசாரணை நடத்தி வரும் பரபரப்பான சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (12-11-25) நடைபெற்றது. பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

அதில், செங்கோட்டையல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்து விரைவில் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும், பயங்கரவாதத்தை துளியும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாக டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம், பயங்கரவாத தாக்குதலா? அல்லது தற்செயலாக நடந்த விபத்தா? என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வந்துள்ள நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் செங்கோட்டையில் நடைபெற்றது பயங்கரவாத தாக்குதால் தான் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் தான் என சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment