நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி (28.01.2026) காலை 11 மணியளவில் தொடங்கியது. இத்தகைய சூழலில் தான் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக நிதி அமைச்சக செயலாளர்களுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்வுவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01.02.2026) காலை சந்தித்து பேசினார். அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இனிப்பு வழங்கி ஊட்டிவிட்டார்.
இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு 2026-27ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கியது. அதனைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை காலை 11 மணியளவில் நாடாளுமன்ற மக்களவையில் தொடர்ந்து 9வது முறையாக தாக்கல் செய்து உரையாற்றினார். அதில், “20 புதிய தேசிய நீர்வழிப் பாதைகள் உருவாக்கப்படும். கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உள்கட்டமைப்பு இடர் உத்தரவாத நிதியம் உருவாக்கப்படும். பொதுக்கட்டமைப்புகளுக்கான மூலதனம் 12.2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 10,000 கோடி ரூபாய் வளர்ச்சி நிதியம் ஒதுக்கீடு செய்யப்படும். கொள்கலன் உற்பத்திக்கு 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். நகரங்களை இணைக்கும் வளர்ச்சி வழித்தடங்களாக 7 அதிவேக ரயில் பாதைகள் உருவாக்கப்படும். அதன்படி மும்பை – புனே, புனே – ஹைதராபாத், ஹைதராபாத் – பெங்களூரு, ஹைதராபாத் – சென்னை, சென்னை – பெங்களூரு, டெல்லி – வாராணசி, வாராணசி – சிலிகுரி ஆகிய நகரங்களுக்கு இடையே அமைக்கப்படும். கரிம ஈர்ப்பு மற்றும் சேமிப்புத் தொழில்நுட்பங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/01/bugget-2026-nirmala-2-2026-02-01-13-10-37.jpg)
பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் வகையில் மூலதனச் செலவினங்களுக்காக தொகை 12.2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும். நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்காக சிறப்பு வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நீடித்த சரக்கு போக்குவரத்துக்கான சூழல் அமைப்பிற்கு உத்வேகம் அளிக்கும் நடவடிக்கையாக புதிய பிரத்யேக சரக்கு போக்குவரத்துக்கான வழித்தடம் அமைக்கப்படும். 20 புதிய தேசிய நீர்வழிப்பாதைகள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஏற்படுத்தப்படும். இதற்காக பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் உருவாக்கப்படும். உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக்கான கப்பல் பழுதுநீக்கும் கட்டமைப்பு வாரணாசி மற்றும் பாட்னாவில் அமைக்கப்படும்.
கடலோர சரக்குப் போக்குவரத்து ஊக்குவிப்புத்திட்டம் தொடங்கப்படுவதன் மூலம் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து மற்றும் கடலோரக் கப்பல் போக்குவரத்துக்கான் பங்களிப்பு அதிகரிக்கும். உள்நாட்டு கடல் விமான உற்பத்திக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்தியாவின் அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் விரைவான வங்கி சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மின் நிதி நிறுவனமும், கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனமும் மறுசீரமைக்கப்படும். நகராட்சி பத்திரங்கள் மூலம் பெருநகரங்களின் மேம்பாட்டுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் 1,000 கோடி ரூபாய் மதிப்பிற்கும் கூடுதலான ஒற்றை கடன் பத்திரங்களுக்கு 100 கோடி ரூபாய் ஊக்கத்தொகை நிறுவன முதலீட்டுத் திட்டத்தின் மூலம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்திய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/01/bugget-2026-nirmala-1-2026-02-01-13-10-54.jpg)
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை எட்டும் வகையில், சேவைத்துறையின் நடவடிக்கைகளுக்கு பரிந்துரைக்கும் வகையில் தொழில்நிறுவனங்கள், வேலைவாய்ப்பை வழங்கும் உயர்நிலைக் கல்விக்கான நிலைக்குழு ஏற்படுத்தப்படும். சுகாதாரத்துறையில் இளையோருக்கான புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான நடவடிக்கைகளாக சுகாதார பணிகள் சார்ந்த தொழில்முறையினருக்கான நிறுவனங்கள் மேம்படுத்தப்படும். 10 தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் அது சார்ந்த புதிய நிறுவனங்கள் உருவாக்கப்படும். ஜாம் நகரில் உள்ள உலக சுகாதார அமைப்பின் சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையம் மேம்படுத்தப்படும்
கடனுதவியுடன் கூடிய மூலதன மானியத் திட்டம் தொடங்கப்படும். 20,000-க்கும் அதிகமான கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். கால்நடை மற்றும் துணை கால்நடை மருத்துவக் கல்லூரிகள், பரிசோதனை ஆய்வகங்கள், இனப்பெருக்க வசதிகள் ஏற்படுத்தப்படும். மும்பையில் உள்ள இந்திய படைப்பாற்றல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆதரவுடன் 15 ஆயிரம் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் வரைகலை (அனிமேஷன்) ஒளிக்காட்சிகள், விளையாட்டு மற்றும் சித்திரக்கலை (காமிக்ஸ்) படைப்பாற்றல் ஆய்வகங்கள் உருவாக்கப்படும். அரிதான கனிமங்களை (Rare Earth Elements) மேம்படுத்த தமிழ் நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களில் பிரத்யேக வழித்தடங்கள் அமைக்கப்படும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/01/bugget-2026-nirmala-2026-02-01-13-11-10.jpg)
நாட்டின் கிழக்குப் பகுதியில் புதிய தேசிய வடிவமைப்பு நிறுவனம் ஏற்படுத்தப்படும். தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் 5 பல்கலைக்கழக நகரங்கள் அமைப்பதற்கு மாநில அரசுகளுக்கு உதவி வழங்கப்படும். லாபம் இல்லாத நிலையை ஈடு செய்யும் நிதியம் அல்லது மூலதன ஆதரவு மூலம் மாவட்டந்தோறும் ஒரு மாணவியர் விடுதி ஏற்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/01/bugget-2026-nirmala-3-2026-02-01-13-09-41.jpg)