Advertisment

கேரளா செண்டை மேள குழுவினர் சென்ற கார் கவிழ்ந்து விபத்து; எதிர்பாராதவிதமாக நடந்த சோகம்!

cari

Unexpected tragedy on Kerala Sentai Mela group's car overturns

கேரளாவைச் சேர்ந்த சென்டை மேளக்குழுவினர் இன்று (02-08-25) காலை ஒரு காரில் 9 பேர் பயணித்து தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதன் பின்னர், அவர்கள் மாலையில் பாண்டிச்சேரியில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றிற்கு சிதம்பரம் புறவழி சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.

Advertisment

அப்போது எதிர்பாராதவிதமாக கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த வயலில் தலைக்குப்பற கார் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 9 பேரில் கேரளா திருவனந்தபுரம் எரூர் பகுதியைச் சேர்ந்த கௌரிநந்தா (20)  என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயத்துடன் உயர் தப்பிய 8 பேரை உடனடியாக 108 அவசர உறுதி மூலம் சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனையின் பிணவரியில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அண்ணாமலை நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment
car accident Kerala Mayiladuthurai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe