திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 93ஆவது பிறந்தநாள் இன்று (02-12-25) கொண்டாடப்படுகிறது. அவருடைய பிறந்தநாளுக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கீ.வீரமணியில் இல்லத்திற்குச் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Advertisment

இந்த நிலையில், சென்னையில் உள்ள பெரியார் திடலில் இன்று கீ.விரமணியின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “நான் துணை முதலமைச்சராக அல்ல, கழகத்துடைய இளைஞரணி செயலாளராக மட்டுமல்ல அதைவிட நான் பெருமையாக கருதுவது தந்தை பெரியாருடைய கொள்கை பேரனாக இன்றைக்கு நான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன். திராவிடர் கழகம் என்பதும் திமுகவுடைய தாய் வீடு என்று கலைஞர் அடிக்கடி சொல்வார். எல்லோரும் தாய் வீட்டிற்கு செல்லும் போது மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதைவிட தாத்தா வீட்டிற்கு செல்வது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும். அதன்படி, தாத்தா வீட்டிற்கு ஒரு பேரனாக இங்கு வந்திருக்கிறேன்.

Advertisment

நேற்றைக்கு இயக்கத்தை ஆரம்பித்து இன்றைக்கு நான் தான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று பல பேர் ஆசையில் வருகிறார்கள். ஆனால், கவுன்சிலர் பதவி, பஞ்சாயத்து பதவி கூட தேவையில்லை, எங்களுக்கு கொள்கை தான் முக்கியம் என்றும் சமுதாய தொண்டு மட்டுமே முக்கியம் என்றும் பெரியார் காலத்தில் இருந்து நீங்கள் அதை செய்து வருகிறீர்கள்” என்று கூறினார்.