Advertisment

“அண்ணாவே விஜய்யை பார்த்துத்தான் கட்சி ஆரம்பித்தார்” - உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

vjudhayan

Udhayanidhi Stalin taunts Vijay

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்துப் பேசினார். குறிப்பாக தன்னை மாதிரி சொந்தமாக கட்சி ஆரம்பித்து 1 சதவீதம் வாக்கு வாங்கி காட்டுங்கள் என்று திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் சவால் விட்டார்.

Advertisment

அதே நேரத்தில் அந்த கூட்டத்தில் பங்கேற்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுராஜ் என்ற இளைஞர் மயக்கமடைந்து உயிரிழந்தார். ஏற்கெனவே விஜய்யின் கரூர் கூட்டத்தில் 41 பேர் பலியான வடுவே ஆறாத நிலையில் மேலும் ஒருவர் ஒருவர் கூட்டத்தில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் விஜய் பேசியது குறித்தும், கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்தது குறித்தும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், அறிஞர் அண்ணாவே விஜய்யை பார்த்து தான் கட்சி ஆரம்பித்தார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பேசியுள்ளார். மதுரையில் இன்று (14-02-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம், விஜய் கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இந்த கேள்வியை முதலில் யாரிடம் கேட்க வேண்டும்? யார் இதற்கு பொறுப்பு எடுத்து யார் பதில் சொல்ல வேண்டும்? அவரிடம் கேள்வி கேட்பது தான் சரி. அண்ணாவே விஜய்யை பார்த்து தான் திமுகவை ஆரம்பித்தார்” என்று கிண்டலாக பதிலளித்துச் சென்றார்.

Udhayanidhi Stalin tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe