சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக நிர்வாகிகள் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “சேப்பாக்கம் தொகுதியின் வேட்பாளராக இந்த முறை யாரை அறிவித்தாலும் கடந்த முறையை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். இப்போது புதுசு புதுசாக யார் வேண்டுமானாலும் வரலாம், ஷோ காட்டலாம். அவர்களெல்லாம் வெறும் அட்டை. சிறிய காற்று அடித்தாலும் காணாமல் போய்விடும். மத்திய உள்துறை அமைச்சர் எப்போதும் என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான் என்னைப் பற்றியே பேசுகிறார்.
உதயநிதி ஸ்டாலினை முதல்வராக ஆக்க விட மாட்டோம் என அமித் ஷா சொல்கிறார். நான் முதல்வர் ஆக வேண்டும் என்று கேட்டேனா? நீங்கள் என்ன கூப்பாடு போட்டாலும், என்ன சதி திட்டம் செய்தாலும் தமிழ்நாடு மக்கள் எங்கள் தலைவரை தான் மீண்டும் முதல்வராக அமர வைப்பார்கள். பா.ஜ.கவின் உருட்டல் மிரட்டல்களுக்கு திமுக பயப்படாது. நீங்கள் மிரட்டினால் பயப்படுவதற்கு நாங்கள் அண்ணா திமுக கிடையாது. அண்ணா உருவாக்கிய திமுக” என்று கூறினார்.
ஏற்கெனவே, கடந்தாண்டு நடைபெற்ற திமுக 75 அறிவுத்திருவிழா நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கண்காட்சி வருடத்திற்கு ஒரு முறை நடக்கும். அங்கே தாஜ் மஹால், ஈஃபிள் டவர் போன்ற செட் போட்டிருப்பார்கள். உடனே, அதனை இளைஞர்கள் பார்த்து செல்ஃபி எடுப்பார்கள். கூட்டம் கூட தான் செய்யும். அதெல்லாம் வெறும் அட்டைகள் தான். அதற்கு எந்த விதமாக அஸ்திவாரமோ, கொள்கையோ கிடையாது. சும்மா தட்டினால் போதும், அல்லது சின்ன காற்றடித்தால் போதும் உடைந்துவிடும்” என்று தவெகவை மறைமுகமாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/07/vijayudhaya-2026-01-07-07-49-17.jpg)