மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்த சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, வரவிருக்கும் மும்பை மாநகராட்சி தேர்தலில் அவரது சகோதரரான ராஜ் தாக்கரேவுடன் கூட்டணி சேர்ந்திருப்பது மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மகா விகாஸ் அகாடி கூட்டணியில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் உள்ளது. இந்த கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து, கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் ஆகிய தேர்தலை சந்தித்து படுதோல்வியடைந்தது.

Advertisment

இந்த சூழ்நிலையில், மத்திய அரசு கொண்டு தேசிய கல்வி கொள்கை மூலம் வரும் 2025-2026 கல்வியாண்டில் மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு 1-5ஆம் வகுப்புகளில் மூன்றாவது மொழியாக இந்தி மொழி கட்டாயமாக்கப்படுவதாக மகாராஷ்டிரா மாநில அரசு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது. மகாராஷ்டிராவில் இந்தியை மொழி திணிப்பதாகக் கூறி அந்த நடவடிக்கைக்கு நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிராக வரும் இணைந்து போராட்டம் நடத்தப்போவதாக ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் அறிவித்தனர். சிவசேனா கட்சியில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து நவநிர்மாண் சேனா கட்சியை ஆரம்பித்த உத்தவ் தாக்கரேவின் சித்தப்பா மகனான ராஜ் தாக்கரே, இந்தி திணிப்புக்கு எதிராக மீண்டும் உத்தவ் தாக்கரேவுடன் சேர்ந்திருந்தது அம்மாநில அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து, மாநில அரசு தொடக்கப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்கும் உத்தரவுகளை மகாராஷ்டிரா அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில், மும்பை உள்பட 28 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வரும் ஜனவரி 15ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலி, உத்தவ் தாக்கரே - ராஜ் தாக்கரே ஆகியோர் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது குறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில், “எங்கள் தாத்தா பிரபோதங்கர் தாக்கரே மகாராஷ்டிராவுக்கான போராட்டத்தை வழிநடத்தியவர். மும்பையை மகாராஷ்டிராவில் பெற்ற பிறகு, சிவசேனா பிரமுக் கட்சியை உருவாக்கினார். சிவசேனா உருவாகி 60 ஆண்டுகள் ஆகிறது. சிலர் மும்பையை அழிக்க முயற்சிக்கின்றனர். மராத்தி மக்கள், மாநிலத்துக்காக இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம்” என்று கூறினார். 

Advertisment