ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டம், காவேரிப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. முன்னதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் உத்தரவின் பேரிலும், துணை காவல் கண்காணிப்பாளர் ஜாபர்சித்திக் மேற்பார்வையிலும் காவல்துறை சோதனை நடத்தியது.
அப்போது காரில் வந்த வேலூரை சேர்ந்த மணிகண்டன் (34), சீனிவாசன் (23), பிரியா (27), பவானி (21) ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள 21 கிலோ கஞ்சா மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற ஆணையின்படி ஆண்கள் சேலம் மத்திய சிறையிலும், பெண்கள் வேலூர் பெண்கள் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/27/tpr-couple-2026-02-27-14-54-31.jpg)