வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த பக்காலப்பல்லி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் இன்று வழக்கம் போல் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தொழிற்சாலையில் உள்ள இயந்திரத்தில் விஷ வாயு கசிந்துள்ளது அந்த இடத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் ஷேக் அலி (58) மற்றும் ஜமால் பாஷா (41) ஆகிய இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.
இதனை கவனித்த அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக மயங்கி விழுந்த இருவரையும் மீட்டு ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறியதால் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரணாம்பட்டு காவல்துறையினர் இருவர் உடலையும் மீட்டு பிரோத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்துக்கு குறித்து பேர்ணாம்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us