பைக்கில் அதிவேக பயணம்: கொடூர விபத்தால் பரிதாபமாகப் பிரிந்த இரு உயிர்கள்!

103

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேரூராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரத். இவர் தனது நண்பர்களுடன் கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி விலை உயர்ந்த பைக்கில் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்தார்.

அதே சமயம், மேலேரி பகுதியில் இருந்து சோமாண்டார்குடி கிராமத்தைச் சேர்ந்த சாலைப் பணியாளர் குமார் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அதிவேகத்தில் வந்த சரத்தின் பைக், குமாரின் வாகனத்தின் மீது மோதியதால், சாலைப் பணியாளரின் வாகனம் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு விபத்திற்கு உள்ளானது. இதில், சாலையின் தடுப்பின் மீது மோதியதால் சரத்திற்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, சரத் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்த சாலைப் பணியாளர் குமாரைப் பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குமார், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் காவல்துறையினர், சரத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

accident police
இதையும் படியுங்கள்
Subscribe