ரயிலில் 14 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் உட்பட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லக் கூடிய டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரயில்வே போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரயில்வே காவல்துறையினர் நேற்று டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஈரோட்டில் இருந்து முன்பதிவு இல்லாப் பெட்டியில் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
அப்பொழுது திருப்பூர் அருகே வந்த பொழுது ஒரு மூட்டையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த சுபாஷீஷ் (28), மாயாவதி மாலிக்கோ (22) என்பதும், அதை கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து, 14 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.