காஞ்சிபுரத்தில் வீட்டில் டிவியில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டதால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கைகலப்பில் முடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிப்பூர்பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் டில்லிபாபு. எதிர் வீட்டில் அதிக சத்தத்துடன் பாடல் ஒளிபரப்பானதை தட்டிக் கேட்டுள்ளார். இதில் காயமடைந்த டில்லி பாபு அவருடைய சகோதரர் சங்கர் ஆகியோர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போதையில் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தாக்குதலுக்கு உள்ளானோர் தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment