அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் "ஸ்டீன்-எரிக் சோல்பெர்க்". 56 வயதான இவர் தனது தாயார்  சுசான் ஆடம்ஸ் (83) உடன் வசித்து வந்துள்ளார்.  மனநலம் பதிப்பிற்குள்ளானதாக கூறப்படும் இவர், சாட் ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவின் தூண்டுதலால் தன் தாயைக்  கொன்றதோடு மட்டுமல்லாமல் அவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவர்களின் உறவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கலிபோர்னியா மாநில நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  

Advertisment

சாட் ஜிபிடி  எனும் செயற்கை நுண்ணறிவு, சோல்பெர்க் கிடம் அவரது தாயால் ஆபத்து இருப்பதாக கூறியதையடுத்து. தன் தாய் தனக்கு விஷம் வைக்கப்போவதாக சோல்பெர்க் கூறிய குற்றச்சாட்டையும் ஆமோதித்துள்ளது. இதன் காரணமாக மன அழுத்தத்திற்குள்ளான சோல்பெர்க் அவரது தாயைக்  கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து  கொண்டார். இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இது சம்பந்தமாக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு எதிராக தொடரப்பட்ட இவ்வழக்கில், செயற்கை நுண்ணறிவுகள் மனிதர்களை தற்கொலைக்கு தூண்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் "விவரங்களைப் புரிந்துகொள்ள தாக்கல்களை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம்"என்று OpenAI செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும்  "மன அல்லது உணர்ச்சி ரீதியான துயரத்தின் அறிகுறிகளைக் கண்டறிந்து அவற்றுக்கு பதிலளிக்கவும், உரையாடல்களைத் தணிக்கவும், நிஜ உலக ஆதரவை நோக்கி மக்களை வழிநடத்தவும் ChatGPT இன் பயிற்சியை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துகிறோம்" என்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் கூறியுள்ளது.

Advertisment