விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இத்தகைய சூழலில் தான் இந்த கோவிலில் ராஜபாளையத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து (வயது 50), சங்கரபாண்டியன் (வயது 65) மற்றும் மாடசாமி ஆகிய மூவர் காவலாளிகளாக வேலை பார்த்து வந்தனர். அந்த வகையில் மாடசாமி நேற்று (10.11.2025) பகலில் வேலை பார்த்துவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார்.
அதே சமயம் நேற்று மாலை பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் இருவரும் பணிக்கு வந்தனர். இந்நிலையில் இன்று (11.11.2025) காலை 6 மணிக்கு, அவர்கள் இருவரையும் பணியில் இருந்து மாற்றி விடுவதற்காக மாடசாமி கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது கோவில் கதவின் கீழே உள்ள சிறிய கதவு உடைக்கப்பட்டுள்ளது. மேலும் காவலாளிகள் இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். இது குறித்து உடனடியாக ஊழியர்கள் மூலமாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கோயிலில் ஆய்வு செய்தனர்.
அதில் கோயிலில் இருந்த உண்டியலை உடைக்க முயற்சி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மற்றொரு புறம் இருவரது உடலையும் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உண்டியல் திருட்டைத் தடுக்க முயன்றபோது காவலர்கள் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜபாளையம் அருகே காவலாளிகள் இருவர் கோவிலுக்குள் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள ராஜபாளையத்தில் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/11/vdu-rajapalayam-sec-ins-2025-11-11-11-14-36.jpg)