திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் சூர்யா. இவர் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி இரவு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சூர்யாவை கொன்றது யார் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் மகன் பசுபதி, வெள்ளைச்சாமி மகன் மனோகரன் ஆகியோரை நத்தம் இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் தலைமையிலான குழுவினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளிவந்திருக்கிறாது. விசாரித்து வருகின்றனர். சம்பவத்தன்று சூர்யா, பசுபதி, மனோகரன் ஆகிய மூவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியது தெரியவந்தது. மது அருந்தியபோது சூர்யா, பசுபதியின் 21 வயது நிரம்பிய தங்கை குறித்து தவறாகப் பேசியதுடன், அவரது மொபைல் நம்பரைக் கேட்டுள்ளார். மேலும் அடிக்கடி பசுபதியைப் பார்த்து, “உன் தங்கை அழகாக இருக்கிறாள், நீ ஊருக்குச் சென்றவுடன் உன் வீட்டுக்குள் நுழைந்து உன் தங்கையிடம் தவறாக நடந்துகொள்வேன்” என்று ஆபாசமாகப் பேசியிருக்கிறார். அத்துடன், “உன் தங்கையின் மொபைல் நம்பரைத் தா, இல்லையென்றால் நீ காதலிக்கும் பெண் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவேன்” என்றும் மிரட்டியிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த பசுபதி, “என் தங்கை உனக்குத் தங்கை முறையில்லையா? அவளைப் பற்றி தவறாகப் பேசாதே” என்று கண்டித்துள்ளார். இதேபோல் பசுபதி பலமுறை கண்டித்தும் சூர்யா அதை ஏற்றுக்கொள்ளாமல், சம்பவத்தன்றும் தவறாகப் பேசியுள்ளார். இதனால் கோவத்தின் உச்சிக்குச் சென்ற பசுபதி, அருகில் இருந்த கல்லை எடுத்து சூர்யாவின் தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் பசுபதியும் மனோகரனும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து இருவரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Follow Us