திருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கவுரி சங்கர் (40). இவர் திருப்பூரில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இங்கு உற்பத்தி செய்யப்படும் அரிசி, மூட்டைகளை ஈரோடு, திருப்பூர், கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் சிறப்பூர்பட்டி காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (56) என்பவர் தனக்கு ஈரோட்டில் அரிசி கடை உள்ளதாகவும், எனவே மொத்த வியாபாரம் செய்ய அரிசி தேவைப்படுகிறது என்றும் 26 கிலோ எடையுள்ள 410 அரிசி மூட்டைகளை கவுரிசங்கரிடம் இருந்து வாங்கியுள்ளார். மேலும் அதற்கான தொகை ரூ.5 லட்சத்த 33 ஆயிரத்து 950 - ஐ 2 நாட்கள் கழித்து தருவதாக கூறி சென்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து 20 நாட்கள் கழித்து கவரிசங்கரின் அரிசி ஆலைக்கு சென்ற முத்துராஜ் ரூ.1 லட்சத்தை கொடுத்துள்ளார். பின்னர் மீண்டும் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 300 மூட்டை அரிசியை கடனாக வாங்கி உள்ளார். அதன்படி தான் கொடுக்க வேண்டிய பாக்கி தொகை ரூ.7 லட்சத்து 83 ஆயிரத்து 900 பின்னர் தருவதாகக் கூறி சென்றுள்ளார். ஆனால் அவர் திரும்ப பணத்தை கொடுக்கவில்லை. முத்துராஜ் திடீரென தலைமறைவானார்.
இதனால் முத்துராஜை பல இடங்களில் கவரி சங்கரை தேடிப் பார்த்து உள்ளார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கவுரிசங்கர் இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன் பெயரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராஜை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முத்துராஜ் தனது கூட்டாளியான வீரப்பன்சத்திரம் கருப்பண்ணன் வீதியைச் சேர்ந்த நந்தகோபால் (41) என்பவரிடம் அரிசியை கொடுத்ததும் அதற்கான தொகையை நந்தகோபால் கொடுக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து முத்துராஜ் நந்தகோபால் ஆகியோரை போலீசார் கைது செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர் கைதான முத்துராஜ் மீது ஏற்கனவே மூன்று மோசடி வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/03/07/1029-2026-03-07-08-16-01.jpg)