கேரளாவை உலுக்கி உள்ள தீபக் மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் யூடியூபரை விசாரிக்குமாறு கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம்  கோழிக்கோடு வடக்கு மண்டல டிஐஜிக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட  பெண் யூடியூபர்  விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார்.

Advertisment

கேரள மாநிலம் கோழிக்கோடு கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் (41) கடந்த 18ஆம் தேதி தனது வீட்டில் சடலமாக தீபக் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அதாவது கடந்த 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தீபக் பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளார்.

Advertisment

அதே பெருந்தில் பயணித்த பெண் யூடியூபர்  ஒருவர் பாலியல் இச்சையுடன் தீபக் தன்னை தொட்டதாக வீடியோ எடுத்து அதை ரீல்ஸாக வெளியிட்டார். அந்த வீடியோ மின்னல் வேகத்தில் சோஷியல் மீடியாக்களில் பரவியது. யார் மீது தவறு என்று இருதரப்பிலும் விவாதத்தையும் விமர்சனங்களையும் அந்த ரீல்ஸ் வீடியோ ஏற்படுத்தியது.

தொடர்ச்சியாக பலரும் தீபக்கை கமெண்ட்டுகளில் சாடி வந்துள்ளனர். இதனால் வேதனையின் உச்சிக்கு சென்ற தீபக் இந்த தற்கொலை முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

Advertisment

தீபக்கின் நண்பர் அஸ்கர் அலி இதுகுறித்து கூறுகையில், வைரலான அந்த ரீல்ஸ் வீடியோவை தீபக்கிடம் நான்தான் காட்டினேன். பார்த்ததும் அதிர்ச்சியில் உரைத்தார். தீபக் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் நடந்த சம்பவம் நினைவில் இருந்திருக்கும். அவர் மிகவும் மனஉளைச்சலுக்கு உள்ளானார்.  

அந்த சம்பந்தப்பட்ட பெண் யூடியூபருக்கு எதிராக புகாரளிக்க ஒரு வழக்கறிஞரை சந்திக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் அடுத்த நாளே இப்படியாகிவிட்டது'' என்றார். இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோழிக்கோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகாரிடம் தீபக்கின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

சோஷியல் மீடியாவில் தீபக்கிற்கு ஆதரவாக கருத்துக்கள் குவிந்து வருகிற நிலையில் பெண் யூூபருக்கு எதிராகவும் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகிறது. கேரள மாநில மனித உரிமை ஆணையம் இதில் தலையிட்டு தீபக்கின் மரணம் குறித்து காவல்துறை விசாரிக்க வேண்டும் என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தற்போது  பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தீபக் மரண வழக்கில் பெண் யூடியூபர் விசாரணை வளையத்தில் வந்துள்ளார்.