Advertisment

'தேய்ந்து வரும் காங்கிரஸுக்கு தவெக பவர் கொடுக்கும்'-இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

750

'Tvk will give power to the fading Congress' - Director S.A. Chandrasekhar Interview Photograph: (vijay)

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதையொட்டி அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இருப்பினும் தேமுதிக, பாமக (ராமதாஸ்) போன்ற ஒரு சில கட்சிகள் இன்று வரை கூட்டணியை உறுதி செய்யவில்லை. இந்நிலையில், பாமக ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி அமைப்பதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் விசிக இந்த கூட்டணியை ஏற்காததால், திமுக பாமக (ராமதாஸ்) கூட்டணி ஏற்பட வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், தவெக வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக ராமதாஸ் தரப்பு எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக தவெகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கருத்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisment

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தவெக தலைவர் விஜய்யின் தந்தை சந்திரசேகர், "தவெகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. விஜய் வெற்றிபெற வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். விஜய்யை யாருடனும் கூட்டணி சேராமல் தனியாக நிற்க வேண்டும் என்றும், அப்படி யாருடனும் சேர்ந்தால் உங்கள் தனித்தன்மையை இழக்க நேரிடும் என்று மக்கள் சொல்கிறார்கள். இருப்பினும் சில காட்சிகள் தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறது. காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசி வந்தார். காங்கிரஸ் ஒரு பாரம்பரியமான கட்சி, அதற்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. அந்தக் கட்சி நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்த கட்சி. ஆனால் தற்போது அந்த கட்சி தேய்ந்து போய்விட்டது. மற்ற கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து ஆதரவு கொடுத்து தற்போது அந்த கட்சி மோசமான நிலைக்கு வந்துவிட்டது. அதற்கு காரணம், அந்த கட்சிக்கு ஆட்சி அதிகாரம் இல்லாதது தான். அதற்கு விஜய் பவரை கொடுக்கிறேன் என்கிறார். பவருக்கு வந்தால் காங்கிரஸ் மீண்டும் வரலாற்றை தக்கவைத்துக்கொள்ளும். 

Advertisment

ஆனால், விஜய் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக கூறுகிறார். எனவே இந்த வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக்  கொள்ள வேண்டும். அதிகாரத்தை பெறுவதன் மூலம் அந்த கட்சி வளர்ச்சியடைந்தால், காங்கிரஸ் மீண்டும் தனது பழைய வரலாற்றை திரும்ப கொண்டுவர முடியும். இந்த வாய்ப்பை அவர்கள்தான் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்" என்று தெரிவித்தார்.

congress Election sachandrasekar tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe