புதுச்சேரியில் உள்ள உப்பள மைதானத்தில் இன்று  (09.12.2025) காலை 10.30 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனையொட்டி பிரச்சார வாகன பேருந்தில் நின்றபடியே  காலை 11 மணி அளவில் விஜய்  பேச உள்ளார். அதன்படி சுமார் 30 நிமிடம் விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்குப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, விரைவு (QR) குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட்டு வருகின்றனர். 

Advertisment

இத்தகைய சூழலில் தான் பாண்டிச்சேரி எல்லையைச் சுற்றிலும் சுமார் 17 இடங்களில் காவல்துறையினர் தடுப்பு வேலிகள் அமைத்துக் கண்காணிப்பு பணி ஈடுபட்டு வருகின்றனர். அதோடு கூட்டம் நடைபெற உள்ள உப்பளம் மைதானத்திற்குள் வருபவர்களை மெட்டல் டிடக்டர் கருவிகள் மூலமாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு கியூஆர் கோடு உடன் கூடிய அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

Advertisment

அதே சமயம் பொதுக்கூட்டத்துக்கு 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் போலீஸ் பாதுகாப்பை மீறி நுழைவாயில் கேட் மீது த.வெ.க தொண்டர்கள் ஏறி குதிக்க முயன்றததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் க்யூஆர் கோடு இல்லாமல் த.வெ.க தொண்டர்கள் சிலர் பொதுக் கூட்டம் நடைபெறும் கேட் மீது ஏறி உள்ளே நுழைந்தனர். த.வெ.க தொண்டர்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்து கூட்டத்திற்குள் நுழைந்ததால் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. 

py-tvk-vijay

இதனால் அங்கு சிறிது நேரம் தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசாரின் பலத்த பாதுகாப்பையும் மீறி மைதானத்துக்குள் த.வெ.க தொண்டர்கள் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றொருபுறம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் காவல்துறையினரிடம் பேசி டோக்கன் இல்லாதவர்களையும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அனுமதித்த வைத்தார். இதனால் கடுப்பான காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங் (கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் காரணமாக), “40 பேர் இறந்திருக்கிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எனக்கு சொல்லாதீர்கள்” என ஆனந்த்திடம் ஆவேசமாக பேசினார்.

Advertisment