Advertisment

“தேர்தல் ஆணையத்திற்கு த.வெ.க. சார்பில் நன்றி” - விஜய்!

eci-tvk-vijay-vanakkam

கோப்புப்படம்

இந்திய தேர்தல் ஆணைய விதிப்படி அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பட்டியடலிடும், 184 சின்னங்களில் தங்களுக்கு தேவையான சின்னங்களை குறைந்தபட்சம் 5 முதல் 10 சின்னங்கள் வரை தேர்வு செய்து கட்சிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு பொதுச் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்தாண்டு நவம்பர் மாதம் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், விசில், ஆட்டோ, வெற்றி கோப்பை உள்ளிட்ட சின்னங்களை தவெக பரிந்துரை பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது. 

Advertisment

இத்தகைய சூழலில் தான், விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. அதன்படி தவெக போட்டியிடும்  தொகுதிகளில் பொதுச் சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த சின்னம், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சியான தவெக, தேர்தல் ஆணைய விதிப்படி கணக்குகளை தாக்கல் செய்துள்ளதால் பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில். தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத் தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

tvk-whistle

விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு.

நமது சின்னம் விசில். நல்லவர்கள் சின்னம் விசில். நாடு காப்பவர்கள் சின்னம் விசில். ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில். ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில். வெற்றிச் சின்னம் விசில். வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். விசில் போடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Assembly Election 2026 election commision of india Tamilaga Vettri Kazhagam tvk vijay whistle
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe