தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் இன்று (05.11.2025) நடைபெற்றது. காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த கூட்டத்தில் கரூர் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Advertisment

இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் பேசுகையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களுக்கும் தோழிகளுக்கும் தமிழக மக்களுக்கும் என்னுடைய வணக்கம். நமது குடும்ப உறவுகளை இழந்ததினால் சொல்ல முடியாத வேதனையிலும் வலியிலும் இவ்வளவு நாளாக இருந்தோம். அப்படிப்பட்ட அந்த சூழலில் நமது சொந்தங்களின் மனம் பற்றி இருக்க வேண்டியது நம்முடைய கடமை. அதனால்தான் அவர்களோடு சேர்ந்து அமைதி காத்து வந்தோம். ஆனால் இப்படி அமைதி காத்து வந்த நேரத்தில் நம்மைப் பற்றி வன்ம அரசியல் வலைகள், அர்த்தமற்ற அவதூறுகள் என்று இது மாதிரி நிறைய விஷயங்கள் நம்மைப் பற்றிப் பின்னப்பட்டன. பரப்பப்பட்டன.  

Advertisment

இது எல்லாமே சட்டம் மற்றும் சத்தியத்தின் துணை கொண்டு துடைத்து எரியத்தான் போகிறோம். அதற்கு முன்னால் தமிழகச் சட்டமன்றத்தில் நமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஒரு உரைக்கு ஒரு நாகரிக பதிலடி கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அரசியல் செய்ய விருப்பமில்லை அரசியல் செய்ய விருப்பமில்லை என்று அடிக்கடி சொல்கிற முதல்வர் நம்மைக் குறிப்பிட்டு பல்வேறு அவதூறுகளைப் பதிவு செய்வதன் வாயிலாகப் பெருந்தன்மையைப் பேரளவில் மட்டுமே பேசும் முதல்வர் 15.10.2025 அன்றைக்குத் தமிழகச் சட்டமன்றத்தில் நமக்கு எதிராகப் பேசிய பேச்சில் எவ்வளவு வன்மத்தைக் கக்கியுள்ளார் என்பதையும் எப்படிப்பட்ட ஒரு அரசியல் செய்ய முயல்கிறார் என்பதையும் தமிழக மக்கள் உணராமலா இருப்பார்கள்.  

tvk-spl-meet

இந்த கரூரோடு சேர்ந்து இந்த 5, 6 மாவட்டத்துக்கு இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்தி இருக்கிறோம். போயிருக்கிறோம். அங்கெல்லாம் இந்த லாஸ்ட் நிமிடம் வரைக்கும் எங்களுக்கு அந்த இடம் கொடுப்பார்களா?. மாட்டார்களா? பெர்மிஷன் தருவார்களா மாட்டார்களா?. இப்படியே இழுத்து அடிச்சசுட்டு இருப்பார்கள். நாகப்பட்டினத்தில் சொன்னது மாதிரிதான் நாங்கள் ஒரு இடம் செலக்ட் பண்ணிக் கேட்போம். மக்கள் நல்ல ஸ்பேசியஸ் நின்று பார்க்கிற மாதிரி. ஆனால் அவர்கள் அதையெல்லாம் ரிஜெக்ட் செய்துகொண்டு மக்கள் நெருக்கடியோடு நின்று பார்க்கிற மாதிரி ஒரு இடத்தை செலக்ட் பண்ணி எங்களுக்குக் கொடுப்பார்கள். இது டீபால்ட்டா எல்லா இடத்திலேயும் ஒரு ஆர்கயுமென்ட் நடந்து கொண்டு இருக்கிறது என்று வையுங்கள். அதுமட்டுமல்லாமல் இந்தியாவிலேயே எந்த ஒரு அரசியல் கட்சித்தலைவருக்கும் கொடுக்கப்படாத கட்டுப்பாடு. அதாவது பேருந்துக்குள்ளேயே இருந்து பார்க்க வேண்டும். மேலே வந்து கை காட்டக் கூடாது. இப்படி எல்லாம் ஒரு அதீத கட்டுப்பாடுகளைக் கொடுத்த உடனே எங்கள் ( த.வெ.க.) தரப்பில் இருந்து ஒரு அறிக்கையும் வெளியிட்டோம்.

Advertisment

அது மட்டுமல்லாமல் தமிழக வெற்றி கழகம் சார்பாக அனைத்து கட்சிகளுக்கும் சமமாக ஒரு முறையான ஒரு பொது வழிகாட்டு முறைகள் (எஸ்.ஓ.பி.) வழங்க வேண்டும் என்று சொல்லி உயர் நீதிமன்றத்தையும் நாடி இருக்கிறோம். இதுவும் தமிழக மக்கள் உணராமலா இருப்பார்கள். இப்படி ஒரு அரசியல் காழ்ப்புடன் நேர்மை திறனற்று நம்மைப் பற்றி இந்த குற்றம் சாட்டியுள்ள குறுகிய மனம் கொண்ட முதல்வருக்கு ஒரு சில கேள்விகள். உச்சநீதிமன்றத்தில் அதாவது 13.10.2025 அன்றைக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்த விவாதங்களை வைத்தும், அந்த உத்தரவுகளை வைத்தும் இந்த கேள்விகள்.  

tvk-vijay-head-vanakkam

இப்படிப் பொய் மூட்டைகளாக நம்மைப் பற்றி இந்த அவதூறுகளை அவிழ்த்து விட்ட முதல்வருக்கும், திமுக அரசுக்கும் சார்பாகக் கோடிகளைக் கொட்டி அமர்த்தப்பட்ட அறிவார்ந்த வழக்கறிஞர்கள் அவர்கள் இந்த கபட நாடக திமுக அரசின் தில்லுமுல்லுக்களைத் தாங்கி பிடிக்க இயலாமல் உச்சநீதிமன்றத்தில் திக்கு திணறி நின்றது முதல்வருக்கு மறந்துவிட்டதா?. கரூர் சம்பவத்துக்கு அப்புறம். அவசர அவசரமா ஒரு தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.  அந்த தனி நபர் ஆணையத்தை அவமதிக்கிற மாதிரி அரசு உயர் அதிகாரிகள் காவல்துறை உயர் அதிகாரிகள் எல்லாருமே நம்மைப் பற்றி பொல்லாத இந்த அவதூறுகள் பரப்பி ஒரு செய்தியாளர்கள் சந்திப்பு. அவசர அவசரமா இதெல்லாம் ஏன் நடக்கிறது?. எதற்காக நடக்கிறது அப்படி என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.

இதுவும் தமிழக முதல்வர் மறந்துவிட்டாரா?. அதன் பிறகு அந்த தனி நபர் ஆணையத்தையே தலையிலயே கொட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அது வேற விஷயம். இப்படியெல்லாம் கேள்வி கேட்ட உடனே ஏதாவது பதில் சொல்லி ஆக வேண்டும் அல்லவா?. அதனால் சட்டமன்றத்தில் பேசும்போது உண்மை நிலையை தெளிவுபடுத்தத் தான் அப்படி என்று  ஏதோ இந்த சட்ட ரீதியாகவும் சத்தியத்திற்காகவும் நடந்தது போல ஏதோ சாமர்த்தியமா பேசுகிறதா நினைத்துப் பேசி இருக்கிறார். இப்படி ஒரு 50 வருஷமா பொது வாழ்க்கையில் இருக்கிற ஒரு முதல்வர் சொன்னது எவ்வளவு பெரிய ஒரு வடிகட்டின பொய், சப்பை கட்டுன்னு நான் சொல்லவில்லை உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறார்கள்” எனப் பேசினார்.